உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மக்கள் சந்திப்பு இயக்கம்

மக்கள் சந்திப்பு இயக்கம்

அந்தியூர், அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில், மக்களிடமிருந்து கோரிக்கை மனு பெறும் மக்கள் சந்திப்பு இயக்கம் நேற்று நடந்தது. செயல் அலுவலர் சதாசிவம் வரவேற்றார். தலைவர் பாண்டியம்மாள், துணைத் தலைவர் பழனிசாமி முன்னிலை வகித்தனர்.அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் தலைமை வகித்தார். திருப்பூர் எம்.பி., சுப்பராயன், நுாற்றுக்கும் மேற்பட்ட மக்களிடம் கோரிக்கை மனு பெற்றார். இதேபோல் அந்தியூர் யூனியனில் அத்தாணி பேரூராட்சி அலுவலகம், கீழ்வாணி, கூத்தம்பூண்டி, மூங்கில்பட்டி, வேம்பத்தி, பிரம்மதேசம், சின்னத்தம்பிபாளையம், நகலூர், குப்பாண்டம்பாளையம், மைக்கேல்பாளையம், கெட்டிசமுத்திரம் பஞ்.,களில் கோரிக்கை மனு பெறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை