உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இலவச வீட்டுமனை வழங்க கோரி மனு

இலவச வீட்டுமனை வழங்க கோரி மனு

ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் வீட்டுமனை பட்டா வழங்க கோரி, மனு வழங்கினர்.* சத்தியமங்கலம், கவுண்டன்புதுார், கலைஞர் காலனியை சேர்ந்த, கார்மென்ட்ஸ் மற்றும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் சார்பில் வழங்கிய மனுவில், 'எங்களுக்கு சொந்தமான வீடு, வீட்டுமனை இல்லை. வாடகை வீட்டில் வசித்து, வேலைக்கு செல்வதில் சிரமம் உள்ளது. பொருளாதார ரீதியாக பாதிக்கிறோம். எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், என கோரி உள்ளனர்.* ஈரோடு, ரங்கம்பாளையம் அண்ணா நகர், இரணியன் வீதியை சேர்ந்தவர்கள் வழங்கிய மனுவில் கூறியதாவது:நாங்கள் கூலி வேலை, பிற வேலை செய்து கொண்டு சொந்த இடம், வீடு இல்லாமல் வசிக்கிறோம். நாங்கள் வசிக்கும் பகுதியில் பூமிதான பதிவேட்டில் நிலம் உள்ளது. அதனை தகுதியான எங்களுக்கு அளவீடு செய்து, தரிசு நிலத்தை வகைப்பாடு மாற்றம் செய்து எங்களுக்கு நிலமாக அல்லது வீடாக கட்டித்தர வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ