பிளாஸ்டிக் பை பறிமுதல்
காங்கேயம்:காங்கேயம் நகராட்சி பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி, நகராட்சி ஆணையர் பால்ராஜ், சுகாதார அலுவலர் மற்றும் பணியாளர்கள், இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் பல்வேறு கடைகளில், 20 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்தனர்.