உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போலீஸ்காரர் காயம்

போலீஸ்காரர் காயம்

ஈரோடு:ஈரோடு ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை குடியிருப்பை சேர்ந்தவர் சிவசக்தி, 41; மூலப்பாளையத்தில் நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு பணியில் இருந்தவர், சாப்பிடுவதற்காக டூவீலரில் காளை மாட்டு சிலை பகுதியில் சென்றார். காளை மாட்டு சிலை அருகே மசூதி வளைவில் திரும்பியபோது நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதி விழுந்தார். இதில் வலது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அங்கிருந்தோர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலையில் காயம் ஏற்படவில்லை. சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை