ஓட்டுச்சாவடி பயன்பாட்டு பொருள் ஒருங்கிணைப்பு பணிகள் துவக்கம்
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில் உள்ள, 2,379 ஓட்டுச்சாவடிகளில், 23ல் நடக்கும் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை, அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில், பேக்கிங் செய்யும் பணி நேற்று துவங்கியது.ஓட்டுச்சாவடி வாரியாக பயன்படுத்தும் வாக்காளர் பட்டியல் விபரம், கிளிப்புடன் கூடிய பேடு, பென்சில், பேனா, ரப்பர், அழியாத கருப்பு மை, அதனை தடவுவதற்கான குச்சி, ஸ்டேப்ளர், பின், சீல் வைப்பதற்கான அரக்கு, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, நுால், வெள்ளை பேப்பர் தொகுப்பு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மறை வைத்திருக்கும் இடத்துக்கான அட்டை மறைப்பு, கத்திரிக்கோல், 4 பிளாஸ்டிக் டப்பாக்கள், பிற படிவங்கள், ஸ்கேல், குப்பை போடும் டப் என, 60க்கும் மேற்பட்ட பொருட்களை ஒருங்கிணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இவற்றை ஒருங்கிணைத்து தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக பாதுகாப்பு அறையில் வைத்திருந்து, 22ல் ஓட்டுச்சாவடிக்கு எடுத்து செல்வர்.