உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காணும் பொங்கல் கொண்டாட்டம்

காணும் பொங்கல் கொண்டாட்டம்

புன்செய்புளியம்பட்டி: காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாட, பவானிசாகர் பூங்காவுக்கு நேற்று ஏராளமான சுற்-றுலா பயணிகள் வந்திருந்தனர்.ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக, பவானிசாகர் பூங்கா உள்ளது. அணையை ஒட்டி, 15 ஏக்கர் பரப்பளவில் சிறுவர் படகு, சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல், செயற்கை நீரூற்றுகள் உள்ளன. காணும் பொங்கல் பண்டி-கையையொட்டி, நேற்று காலை முதலே ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பூங்காவிற்கு வந்-தனர். நுழைவு கட்டணமாக 5 ரூபாய் வசூலிக்கப்-பட்டது.பூங்காவில் குழந்தைகள் ஊஞ்சல் ஆடியும், சறுக்குகளில் ஏறி விளையாடியும், குதுாகலித்-தனர். சிறுவர்கள் பெற்றோருடன் சேர்ந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், நுழைவு சீட்டு வழங்க கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டன. சிறுவர் ரயில், துாக்கு ஊஞ்சல், பெண்டுலம், வாக்கர் பலுான், சோட்டாபீம், ஜம்பிங் கேம், பலுான் விளையாட்டு, கொலம்பஸ், சிறுவர் படகுகளில் சென்று சுற்-றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பூங்கா முன்புறம் உள்ள, 30க்கும் மேற்பட்ட கடைகளில், மீன்ரோஸ்ட் விற்பனை களைகட்டியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை