அஞ்சல் ஊழியர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில், தேசிய கூட்டமைப்பு செயலர் செந்தில்குமார் தலைமையில், ஈரோடு, காந்திஜி சாலை, தலைமை தபால் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.தபால் துறையில் தபால்காரர் பணியை அஞ்சல் அலுவலகத்தில் இருந்து பிரித்து, இன்டிபென்டன்ட் டெலிவரி சென்டர் உட்பட பல பெயரில் தனியார், கார்பரேட் நிறுவனங்களில் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். பட்டுவாடா பணி, அஞ்சலகத்தில் இருந்து பிரித்து, கார்ப்பரேட் மயமானால், அஞ்சல் சேவை இல்லாமல் போகும். அஞ்சல் சேவையை தனியார் மயமாக்கும்போது, பி.எஸ்.என்.எல்., போல நலிந்துவிடும். இந்தியன் போஸ்டல் அதிகாரி முதல் அனைவரும் சாதாரண அரசு ஊழியர் போல மாற்றப்படுவார்கள். இச்செயல்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.