கொங்கு கல்வி நிலைய பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ஈரோடு: பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி ராணிப்பேட்டையில் நடந்தது. இதில், 14 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில், 38 மாவட்ட அணிகள் பங்-கேற்றன. இதில் ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலைய மாணவர்கள், யோகேஸ்வரன், சஸ்வின் ஆகியோர், தங்கப்ப-தக்கம் வென்றனர். ஈரோடு மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த இருவரையும், கலெக்டர் கந்தசாமி பரிசு வழங்கி பாராட்டினார்.சாதனை படைத்த மாணவர்களை, பள்ளி தலைவர் சின்னசாமி, தாளாளர் செல்வராஜ், பொருளாளர் குணசேகரன், முதல்வர் நதியா அரவிந்தன், உதவித்தலைவர்கள் சோமசுந்தரம், தெய்வசிகாமணி, இணைச் செயலாளர் மீனாட்சி சுந்தரம், இணை பொருளாளர் நாகராஜன் உள்ளிட்டோர் பாராட்டினர்.