உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானிசாகர் தொகுதியில் திட்டப்பணிகள் துவக்கம்

பவானிசாகர் தொகுதியில் திட்டப்பணிகள் துவக்கம்

புன்செய்புளியம்பட்டி, நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர் சட்டசபை தொகுதியில், பவானிசாகர் யூனியன் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை எம்.பி., ராசா நேற்று தொடங்கி வைத்தார். பெரியகள்ளிப்பட்டி மற்றும் உத்தண்டியூர் ஊராட்சிக்கு புதிய கட்டடம் திறப்பு, பவானிசாகரில் ரேஷன் கடை திறப்பு மற்றும் தொப்பம்பாளையம் அண்ணாநகர் பகுதிக்கு குடிநீர் குழாய் விரிவாக்க பணிக்கு அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய அரசின் ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் மக்களுக்கு என்ன பயன்? 50 சதவீத வரி விதிப்புக்கும் இதற்கும் என்ன தொடர்பு. இதனால் இந்தியாவை காப்பாற்றி விட்டார்களா? மக்கள் பயன் பெறுவார்கள் என்று மத்திய அரசு சொல்கிறது. அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஜி.எஸ்.டி., வரி விதிப்பின் காரணமாக திருப்பூர் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு என்ன பதில்? பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு என்ன விலை என கேட்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி