மேலும் செய்திகள்
விஜய் - அண்ணாமலை: கலங்கும் கூடாரங்கள்!
09-Jun-2026
ஈரோடு:ஈரோடு சூரம்பட்டியில், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், மாதர் அமைப்பு சார்பில் 'நீட்' தேர்வு முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட செயலர் அமல்ராஜ் தலைமை வகித்தார். ஒவ்வொரு ஆண்டும் 'நீட்' தேர்வில் ஏதாவது ஒரு முறைகேடும், வினாத்தாள் வெளியாவதும் போன்ற முறைகேடு தொடர் கதையாகிறது. அதனை தடுக்க முடியவில்லை. இதனால் படித்த, ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும். தமிழகத்துக்கு 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
09-Jun-2026