ஜி.ராம்ஜி திட்டத்தில்வேலை கோரி ஆர்ப்பாட்டம்
புன்செய்புளியம்பட்டி:மத்திய அரசின் ஜி.ராம்ஜி திட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலை வேண்டும் என்று கூறி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில், பவானிசாகர் யூனியன் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பவானிசாகர் ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். இதில், 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். முடிவில் கோரிக்கையை வலியுறுத்தி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷிடம் மனு வழங்கினர்.