உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கைது நடவடிக்கை கோரி அளுக்குளியில் மறியல்

கைது நடவடிக்கை கோரி அளுக்குளியில் மறியல்

கோபி:கோபி அளுக்குளி அருகே கொள்ளுமேடு குடியிருப்பை சேர்ந்த பெயிண்டர் சரண், 22; உறவினர்களான சக்திவேல், 45, கவிதா, 35, ஆகியோருடன், அதே பகுதியில் உள்ள அண்ணமார் கோவில் திருவிழாவுக்கு இரு நாட்களுக்கு முன் சென்றிருந்தார். அப்போது மதுபோதையில் நான்கு பேர், காரணமே இல்லாமல் மூவரையும் தாக்கியுள்ளனர். மூவரும் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். இதுகுறித்து சரண் கொடுத்த புகாரின்படி, நான்கு பேர் மீது கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நான்கு பேரையும் போலீசார் கைது செய்யாததை கண்டித்து, கொள்ளுமேடு குடியிருப்பை சேர்ந்த, 70க்கும் மேற்பட்டோர் அளுக்குளி பஸ் நிறுத்தத்தில் நேற்று மதியம் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடத்துார் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கவே கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !