உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்

கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்

ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில், நேற்று முதல் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் துவங்கியது.கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவுவதை தடுக்க, தமிழகத்தில், 7 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று துவங்கியது. ஈரோடு வில்லரசம்பட்டி, ஒண்டிக்காரன்பாளையத்தில் நடந்த முகாமில், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் பாஸ்கர் தலைமையில் தடுப்பூசி செலுத்தினர். பசு, எருமை, கன்று என, 200 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.மண்டல இணை இயக்குனர் டாக்டர் பாஸ்கர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் வரும், 31 வரை அனைத்து கிராமங்கள், நகரப்பகுதி என விடுதல் இன்றி கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படும். கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், பணியாளர்கள் என, 114 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4 மாத கன்று முதல் அனைத்து வயதுடைய பசுக்கள், எருமை இனங்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.மாவட்டத்தில், 20 கால்நடை மருந்தகங்களில் உள்ள ஐ.எல்.ஆர்.குளிர்சாதன பெட்டிகளில், 3 லட்சத்து, 5,200 தடுப்பூசி மருந்துகள், சிரிஞ்கள் தயார் நிலையில் உள்ளன.இவ்வாறு கூறினார். துணை இயக்குனர்கள் டாக்டர் பிரசில்லா, உதவி இயக்குனர்கள் கண்ணன், எத்திராஜன், அய்யாசாமி, சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை