உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவா சுற்றுலாவுக்கு ரயில்வே அழைப்பு

கோவா சுற்றுலாவுக்கு ரயில்வே அழைப்பு

ஈரோடு; இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவான, ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில் கோடை விடுமுறையை கொண்டாட, கோவா சிறப்பு ரயில் சுற்றுலாவை அறிமுகம் செய்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக ரயில் செல்லும். ஒரு நபருக்கு, 26,300 ரூபாய் கட்டணம். மே, 1ல் துவங்கி, 7ல் சுற்றுலா நிறைவு பெறும். ஏ.சி., படுக்கை வசதி ரயில், மூன்று நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதி, சுற்றுலா தலங்-களை பார்க்க ஏ.சி., போக்குவரத்து உள்ளது. முன்-பதிவுக்கு www.irctctourism.comஇணையதளத்தில் பார்வையிடலாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை