மேலும் செய்திகள்
'ஜிவி' பள்ளி மாணவர்கள் தடகள போட்டியில் சாம்பியன்
01-Sep-2024
ஈரோடு : ஈரோடு கொங்கு கல்வி நிலையம், ரங்கம்பாளையம் பள்ளி மாணவர்கள், ஈரோடு கிழக்கு குறுமைய அளவிலான தடகள போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். ஈரோடு ரயில்வ இன்ஸ்டிடியூட் மைதானத்தில் போட்டிகள் நடந்தன.இதில் ரங்கம்பாளையம், கொங்கு கல்வி நிலைய பள்ளி மாணவர் பிரித்திவ், 19 வயதுக்குட்பட்ட பிரிவில் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். பள்ளி மாணவ, மாணவியர், 145 புள்ளிகளை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். இவர்களை பள்ளி தலைவர் சின்னச்சாமி, தாளாளர் செல்வராஜ், பொருளாளர் குணசேகரன் மற்றும் உதவி தலைவர்கள், உதவி செயலாளர், உதவி பொருளாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், முதல்வர் நதியா அரவிந்தன் பாராட்டி வாழ்த்தினர்.
01-Sep-2024