உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

ஈரோடு:ஈரோடு வீரப்பன்சத்திரம், பா.தண்ணீர்பந்தல்பாளையம் பகுதி, புரட்சிகர இளைஞர் முன்னணி பகுதி பொறுப்பாளர் கலியபெருமாள் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது: கனி ராவுத்தர்குளத்தில் இருந்து அக்ரஹாரம் சாலையில் நீண்ட காலமாக டாஸ்மாக் கடை எண்: 3527 செயல்படுகிறது. இப்பகுதியில் வசிக்கும், 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இக்கடை பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. மது குடிப்போரால் பல பிரச்னை, விபத்து, சண்டை ஏற்படுகிறது. கடையை அகற்றக்கோரி பல முறை மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு கடையை அகற்ற உத்தரவிட்டுள்ளதால், விரைவாக அகற்ற வேண்டும். இவ்வாறு கூறினர். புளியம்பட்டியில் அலட்சியம்புன்செய்புளியம்பட்டியில் பவானிசாகர் சாலை வடக்கு காந்திபுரம் பகுதியில், இரு டாஸ்மாக் கடை அடுத்தடுத்து அமைந்துள்ளது. இந்த கடைகளால் பல்வேறு விபத்து ஏற்பட்டு உயிர் பலி நிகழ்ந்துள்ளது. பாரில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இத்தனை சம்பவங்கள் நடந்தும், புதிய அரசு உத்தரவிட்டும், கடைகளை மூடுவதற்கு, அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை