உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காத்திருப்பு பேராட்டத்தில் ஈடுபட்ட சவர தொழிலாளர்

காத்திருப்பு பேராட்டத்தில் ஈடுபட்ட சவர தொழிலாளர்

அந்தியூர்: அந்தியூர், தவிட்டுப்பாளையம் அருகே வெள்ளையம்பாளையம் மேட்டில், ஐந்து ஏக்கர் பரப்பளவில், சலவை மற்றும் சவர தொழிலாளர்களுக்கு வீட்டுமனை இடம் ஒதுக்கப்பட்டது. இதுவரை பட்டா பிரித்து கொடுக்கவில்லை. முறையாக பிரித்து கொடுக்க வலியுறுத்தி, பல ஆண்டுகளாக மனு கொடுத்து போராடி வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், நேற்று முன்தினம் இரவு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், பந்தல் போட்டு தங்கி, நேற்று காலை வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்து அந்தியூர் தாசில்தார் கவியரசு, அந்தியூர் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ''வீடுகள் ஒதுக்க அரசு ஆணை கொடுத்து விட்டது. இது தொடர்பாக ஆர்.ஐ., மற்றும் வி.ஏ.ஓ.,விடம் கொடுக்கப்பட்ட பட்டியலின்படி ஆய்வு செய்து வருகின்றனர். இதை தொடர்ந்து வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்படும்'' என்று தாசில்தார் கூறவே, கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை