உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இடைநிலை ஆசிரியர் காத்திருப்பு போராட்டம்

இடைநிலை ஆசிரியர் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு: இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில், சம வேலைக்கு சம ஊதியம் கோரி, நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. இயக்க மாவட்ட பொருளாளர் கார்த்திக் தலைமை வகித்தார். 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை களைவதாக வாக்குறுதி அளித்து நான்காண்டாகியும் நிறைவேற்றவில்லை எனக்கூறினர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.போராட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். பிரச்னை ஏற்படாத வகையில் போராட்டத்தை நடத்திக்கொள்ள டவுன் டி.எஸ்.பி. முத்துகுமரன் அனுமதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை