உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு: இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில், 12வது நாளாக காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை களைவதாக வாக்குறுதி அளித்து நான்காண்டு ஆகியும் நிறைவேற்றப்படவில்லை. சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்-ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 12வது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். அந்தியூர் வட்டார ஒருங்கிணைப்-பாளர் உத்திரசாமி தலைமையில், பெருந்துறை வட்டார ஒருங்கி-ணைப்பாளர் நந்தினி, பிரகாஷ் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி