உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பள்ளிகளுக்கு 2ம் பருவ பாட புத்தகங்கள் அனுப்பி வைப்பு

பள்ளிகளுக்கு 2ம் பருவ பாட புத்தகங்கள் அனுப்பி வைப்பு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு கடந்த 27ல் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது. வரும், 6ல் பள்ளிகள் துவங்குகிறது.இதில் ஒன்று முதல் ஐந்து வரையிலான துவக்க நிலை மாணவ, மாணவியர் மற்றும் 6, 7ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு பாட புத்தகம், நோட்டுகள் வழங்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு நோட்டுகள் மட்டும் வழங்கப்பட உள்ளது.இந்த வகுப்புகளுக்கான பாட புத்தகங்கள் கடந்த, 26ல் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அன்று புத்தகத்தை பெறாதவர்களுக்கு வசதியாக 29,30ல் பாட புத்தகங்கள் பள்ளி வாரியாக நேரடியாக வழங்கப்பட்டது.ஈரோடு காவிரி சாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இருந்து ஈரோடு மாநகரில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று பாட புத்தகம், நோட்டுகள் கொண்டு செல்லப்பட்டன. பள்ளி திறக்கும் நாளில் அனைவருக்கும் பாட புத்தகம், நோட்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை