உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விளையாட்டு பயிற்சி முகாமில் மாணவர்கள் ஆர்வம்

விளையாட்டு பயிற்சி முகாமில் மாணவர்கள் ஆர்வம்

ஈரோடு:ஈரோடு வ.உ.சி., மைதானத்தில், 18 வயதுக்கு உட்பட்ட மாணவ-, மாணவிகளுக்கு கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் நடந்து வருகிறது. தடகளம், கூடைப்பந்து, கையுந்து பந்து, கால்பந்து, இறகுப்பந்து, ஜிம்னாஸ்டிக் மற்றும் கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 135 மாணவர், 125 மாணவியர் என, 260 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். கபடி போட்டி உள் விளையாட்டரங்கிலும், ஜிம்னாஸ்டிக் கோபி கிருஷ்ணா நகர் விளையாட்டரங்கிலும் நடக்கிறது. மே, 1ம் தேதியுடன் பயிற்சி முகாம் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை