உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அதிக தொகை பெறுவதாக புகார் மனு எழுதி தருவோரை வெளியேற்றிய தாசில்தார்

அதிக தொகை பெறுவதாக புகார் மனு எழுதி தருவோரை வெளியேற்றிய தாசில்தார்

ஈரோடு:மனு எழுதி கொடுக்க அதிக தொகை பெறுவதாக எழுந்த தொடர் புகாரால், ஈரோடு தாலுகா அலுவலகத்தில், மனு எழுதி கொடுப்பவர்கள் வெளியேற்றப்பட்டனர்.ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், தாலுகா அலுவலக முன்புறம் மனுக்களை எழுதி கொடுக்க, 25க்கும் மேற்பட்டோர் சாலையோரம் அமர்ந்து இருப்பர். மனு எழுதி தர குறிப்பிட்ட தொகையை, மக்களிடம் இருந்து பெறுவர். சமீபமாக இவர்கள் அதிக தொகை பெறுவதாக புகார் எழுந்தது. இதோடு நில்லாமல், தாங்கள் சொன்னால்தான், மனுக்கள், கோரிக்கை மற்றும் சான்-றிதழ் கிடைக்க, அரசு அலுவலர்கள் கையெழுத்து போடுவர் என்று கூறி, பணத்தை கறந்துள்ளனர். இதையறிந்த ஈரோடு தாசில்தார் முத்துகிருஷ்ணன், உரிய விசாரணை நடத்தி மனு எழுதி கொடுப்பவர்களை தாலுகா அலுவலக வளாக பகுதியில் இருந்து வெளியேற்றி உள்ளார்.இதுகுறித்து தாசில்தார் கூறியதாவது: மக்களே மனுக்களை எழுதி நேரடியாக அரசு அலுவலகங்களை அணுகலாம். தொடர் புகார் காரணமாகவே, மனு எழுதி கொடுப்பவர்கள், தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இவ்வாறு கூறினார்.அதேசமயம் இன்னும் ஓரிரு நாட்களில், சட்டசபை தேர்தல் அறி-விப்பு வெளியாகி விடும். அப்போது நடத்தை விதி அமலுக்கு வந்துவிடும். இனி மனு எழுதி கொடுப்பதாக தாலுகா அலுவலக வளாகத்தில் யாரும் நடமாட முடியாது என்றும், வருவாய் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !