உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சர்ச்சைக்குரிய இடத்தில் டாஸ்மாக்; ஐகோர்ட் உத்தரவு

சர்ச்சைக்குரிய இடத்தில் டாஸ்மாக்; ஐகோர்ட் உத்தரவு

காங்கேயம், காங்கேயம் நகராட்சியில் திருப்பூர் ரோட்டில் அங்கன்வாடி, ரேஷன் கடை, நுாலகம், சந்தை மற்றும் அரசு மருத்துவமனை அருகில், மக்களுக்கு இடையூறாக விதிகளுக்கு புறம்பாக, டாஸ்மாக் கடை (எண்-2347) செயல்பட்டு வருகிறது. இதை வேறிடத்துக்கு மாற்றியமைக்க, காங்கேயம் சமூக ஆர்வலர் சங்கரகோபால், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, மனுதாரர் அளித்துள்ள வரைபட ஆதாரத்தை ஆய்வு செய்து, சம்பந்தபட்ட கடை குறித்து, 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க, டாஸ்மாக் நிர்வாகம், திருப்பூர் கலெக்டருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை