மேலும் செய்திகள்
முத்தால் வாழியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்
30-Apr-2026
ஈரோடு:ஈரோடு அசோகபுரம் கலைமகள் வீதியில் உள்ள, மழை மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு விழாவில் நேற்று முன்தினம் பொங்கல் வைபவம் நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு கம்பம் பிடுங்கும் விழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, கோவில் தலைமை பூசாரி கம்பத்தை பிடுங்கி ஊர்வலமாக எடுத்து சென்றார். வழியெங்கும் திரண்டிருந்த பக்தர்கள் கம்பத்தின் மீது உப்பு, மிளகு துாவி வழிபட்டனர். இதையடுத்து தெப்பக்குளத்தில் கம்பம் விடப்பட்டது. தொடர்ந்து மாலையில் சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் திருவீதியுலா நடந்தது. இன்று மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
30-Apr-2026