உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வினியோகிக்க தயாராக பாடப்புத்தகம், நோட்டு

வினியோகிக்க தயாராக பாடப்புத்தகம், நோட்டு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் அரசு, நிதியுதவி பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வு விடுமுறை ஏப்.,17ம் தேதி முதல் விடப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டுக்கு பள்ளிகள் ஜூன், 1ல் துவங்குகிறது. 1-3 வகுப்புக்கு ஜூன், 4ல் துவங்குகிறது.ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகள் ஈரோடு மாவட்டத்துக்கு அரசு சார்பில் வந்த வண்ணம் உள்ளன. நோட்டு, புத்தகங்கள் இந்த வார இறுதியில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.இதுபற்றி பள்ளி கல்வி துறையினர் கூறியதாவது: ஏழாம் வகுப்பு ஆங்கில மீடியம் கணித பாட புத்தகம், 80 குயர் நோட்டு தவிர ஏனைய புத்தகம், நோட்டுகள் வந்து விட்டன. பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ