உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகம், நோட்டு தயார்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகம், நோட்டு தயார்

ஈரோடு: அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நாளில், மாணவ, மாணவியருக்கு வழங்க, பாடபுத்தகம், நோட்டு தயாராக உள்ளது.அரசு, அரசு நிதியுதவி பள்ளிகளுக்கு ஜன.,4 வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, மூன்றாம் பருவ வகுப்புகள் துவங்க உள்ளது. இதற்காக ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையி-லான மாணவ, மாணவிகளுக்கு வழங்க, பள்ளி-களுக்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்-ளன. இதேபோல் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, தொடக்க கல்வி துறை சார்பிலும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நோட்டு வழங்கப்பட உள்ளது. பள்ளி திறக்கும் நாளில் புத்தகம், நோட்டு வழங்கப்படும்.இதற்கிடையில் ஈரோடு மாவட்ட அரசு, நிதியு-தவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, மூன்றாம் பருவத்துக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி கையேடு ஏற்கனவே வந்துள்ளது.இதுவும் பள்ளி திறக்கும் நாளில் வழங்கப்படும் என பள்ளி கல்வித் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ