கோவில் கட்டுமான பணியில் திருட்டு
தாராபுரம்::தாராபுரத்தை அடுத்த குண்டடம், சங்கப்பாளையம் சாலையில், வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. தற்போது கோவிலில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதற்கான தளவாட பொருட்கள் அருகில் ஒரு கீற்று கொட்டகையில் வைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை சென்று பார்த்தபோது பித்தளை குத்து விளக்குகள் திருட்டு போனது தெரிய வந்தது. புகாரின்படி குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.