உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அடுத்தடுத்து நடக்கும் நாட்டுக்கோழி திருட்டு

அடுத்தடுத்து நடக்கும் நாட்டுக்கோழி திருட்டு

காங்கேயம், காங்கேயத்தை அடுத்த நத்தக்காடையூரை சேர்ந்தவர் செந்தில்குமார், 51; இவரது மாமனார் தோட்டம் முள்ளிபுரம் சிவசக்திபுரத்தில் உள்ளது. அங்குள்ள பண்ணை வீட்டில், நாட்டுக்கோழி வளர்த்து வருகின்றனர்.இங்கு இரண்டு தினங்களுக்கு முன், 80 நாட்டுக்கோழி திருட்டு போனது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி தோட்டத்தில், 15 நாட்டுக்கோழி, யுவராஜ் வளர்த்து வந்த உயர் ரக சேவல் ஐந்து திருடப்பட்டுள்ளது. இந்த கோழிகளின் மதிப்பு, ௧ லட்சம் ரூபாய். புகாரின்படி காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !