காவிரி ஆற்றில் மூழ்கி மூவர் பலி
பவானி:ஈரோடு அடுத்த வள்ளிபுரத்தான்பாளையத்தை சேர்ந்தவர் சம்பத், 62: இவர், கருத்து வேறுபாடு காரணமாக, மனைவியை பிரிந்து, சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். பெற்றோர் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில், அவர்களும் இறந்து போனதால் தனிமையில் வசித்து வந்துள்ளார். நேற்று ஈரோடு பெரியார் நகரில் வசிக்கும், அண்ணன் வையாபுரிக்கு போன் செய்து, எனக்கு துாக்கம் வருவதில்லை. தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறேன் எனத் தெரிவித்து விட்டு, பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வந்த சம்பத், சுவாமி தரிசனம் செய்தார். பின், கூடுதுறையில் உள்ள காவிரி ஆற்றில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார். * கொடுமுடி, ஏமகண்டனுாரை சேர்நதவர் தர்மலிங்கம், 70, கூலி தொழிலாளி. இவர் கடந்த, 30ல் ஏமகண்டனுார், மணல்மேடு பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். ஆனால், அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. நேற்று முன்தினம் மாலை, கொடுமுடி பழைய படித்துறை காளியம்மன் கோவில் அருகே, ஆற்றில் தர்மலிங்கம் சடலமாக மிதந்தார். கொடுமுடி போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.* சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா சேலம் கேம்ப், காந்தி நகரை சேர்ந்தவர் அரசு போக்குவரத்து கழக டிரைவர் கிருஷ்ணமூர்த்தி, 53. இவருக்கு குழந்தைகள் இல்லை. இவரது அக்கா பனிமலர், அவரது கணவர் ஆகியோர் இறந்துவிட்டதாகவும், அவர்களது மகன் நிஷாந்தை, 32, தங்கள் மகனாக கிருஷ்ணமூர்த்தி பாவித்து வந்தார்.நாமக்கல் மாவட்டம் மணியனுார், ஆதிதிராவிடர் தெருவில் உள்ள சொந்த வீட்டில் தங்கி இருந்து நிஷாந்த், பெயின்டிங் வேலை செய்து வந்தார். கடந்த, 1 அன்று தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, சோழசிராமணி என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தார். அப்போது நீரில் மூழ்கி நிஷாந்த் இறந்தார்.