உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு-சேலம் தனியார் பஸ்களில் டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு

ஈரோடு-சேலம் தனியார் பஸ்களில் டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு

ஈரோடு:ஈரோடு-சேலம் செல்ல கடந்த, 5ம் தேதிக்கு முன்பு வரை, சாதாரண பஸ்களில், 43 ரூபாய் கட்டணமாக பெறப்பட்டது. கடந்த, 5ம் தேதி மாலை முதல் ஈரோடு - சேலம் செல்லும் பெரும்பாலான தனியார் பஸ்களில், 50 ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம் அரசு பஸ்களில், 43 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதுபற்றி பஸ் கண்டக்டர்களிடம் கேட்டபோது, ''பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்ட நிலையில் பெரும்பாலான தனியார் பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது,'' என்றனர்.இதேபோல ஈரோட்டில் இருந்து கோவை உட்பட சில வழித்தடங்களில் செல்லும் தனியார் பஸ்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை