ரயில் தண்டவாளத்தில் படுத்து விபரீத முடிவு
ஈரோடு, ஈரோடு, மரப்பாலம் ஆலமரத்து தெரு பாலகிருஷ்ணன் மகன் சுரேஷ், 39. ஆக்டிங் டிரைவர். திருமணமானவர். மது பழக்கத்துக்கு அடிமையாகி சில தினங்களாக உடம்பு சரியின்றி இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, வெண்டிபாளையம் ரயில்வே கேட் அருகே ரயில் வரும் போது திடீரென தண்டவாளத்தின் இடையே படுத்தார். இதில் அவ்வழியே சென்ற ரயில் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி பலியானார். ஈரோடு ரயில்வே போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.