மரக்கன்றுகள் நடும் விழா
பு.புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி நகராட்சி சார்பில், மரக்கன்று நடும் விழா நடந்தது. கமிஷனர் கருணாம்பாள், பொறியாளர் கவிதா ஆகியோர் மரக்கன்று ட்டு துவக்கி வைத்தனர். புங்கன், வேம்பு, நாகலிங்கம், சரக்கொன்றை, பூவரசன், வேங்கை மரக்கன்றுகள், நகராட்சி வாரச்சந்தை வளாகம் மற்றும் 15 வார்டுக்கு உட்பட்ட சாலையோரம், காலி இடங்களில் நடப்பட்டன. வார்டு கவுன்சிலர் புவனேஸ்வரி, மக்கள் கலந்து கொண்டனர்.