மேலும் செய்திகள்
ரயில்வே ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
09-Jun-2026
ஈரோடு:ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன், டி.ஆர்.இ.யு., (தட்சின் ரயில்வே எம்ளாயிஸ் யூனியன்) சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. யூனியன் டிசல் லோகோ ஷெட் செயலாளர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். துணை பொது செயலாளர் பிஜூ, ஓய்வூதியர் சங்க செயலாளர் முருகேசன் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பிற தொழிற்சங்கத்துக்கு அதிக கிளைகள் நடத்த அங்கீகாரம் வழங்கியது போல், டி.ஆர்.இ.யு.,வுக்கும் அதிக கிளைகள் நடத்தி கொள்ள அனுமதிக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
09-Jun-2026