உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / த.வெ.க., மகளிரணி பிரசாரம்

த.வெ.க., மகளிரணி பிரசாரம்

சென்னிமலை: அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் எழுதிய அறிக்கையை, சென்னிமலை நகர பகுதி முழுவதும், சென்னிமலை ஒன்றிய மகளிரணி சார்பாக, தலைவி மைதிலி தலைமையில் பெண்கள் நேற்று வழங்கினர். காங்கேயம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் சதீஷ்குமார், சென்னிமலை ஒன்றிய இளைஞரணி தலைவர் மோகன் குமார் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.* பெருந்துறை ஒன்றிய மகளிரணி ஒருங்கிணைப்பாளர் உமா மகேஷ்வரி தலைமையிலான பெண்கள், பெருந்துறை புது பஸ் ஸ்டாண்டில், பஸ்சுக்காக காத்திருந்த மாணவிகள் மற்றும் பெண்களிடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ