மேலும் செய்திகள்
மின் பெட்டியை தொட்ட 4 வயது சிறுவன் படுகாயம்
04-Oct-2026
பவானி:ஆப்பக்கூடல் அருகே பெரியவடமலைபாளையம் காமராஜர் காலனியை சேர்ந்த, 16 வயது சிறுவன், புன்னம்-சேத்துனாம்பாளையம் சாலை காக்காச்சிகரட்டில் மொபைல்போனை பார்த்தபடி நேற்று மதியம் நடந்து சென்றார். புன்னம் சின்னமேட்டூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த அர்த்தநாரி, 74, சிறுவனை வழிமறித்து செல்போனை எங்கு திருடி வந்தாய் என்று கேட்டு, ஜாதி பெயரை கூறி பேசினாராம். இதனால் பயந்துபோன சிறுவன் ஓட முயன்றபோது அர்த்தநாரி தாக்கியுள்ளார். அவருடன் புன்னம் பெரிய மேட்டூரை சேர்ந்த வடிவேலும், 45, சேர்ந்து, சிறுவனை தாக்கினாரம். இதனால் சிறுவன் சத்தமிடவே இருவரும் ஓடியுள்ளனர். இதுகுறித்த புகாரின்படி வழக்குப்பதிந்த ஆப்பக்கூடல் போலீசார், அர்த்தநாரி மற்றும் ஆறுமுகத்தை கைது செய்தனர்.
04-Oct-2026