உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பள்ளி சிறுமியர் இருவர் மாயம்

பள்ளி சிறுமியர் இருவர் மாயம்

ஈரோடு, ஈரோடு, கருங்கல்பாளையம் பச்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்த குமார்-சுமித்ரா மகள் கோகிலவாணி, 17, பிளஸ் 2 படிக்கிறார். சுமித்ரா வீட்டு வேலை செய்கிறார். குமார் ஏற்கனவே குடும்பத்தை பிரிந்து வேறு திருமணம் செய்து சென்று விட்டார். சூரம்பட்டி நேரு வீதியை சேர்ந்த ராஜா மகள் பிரியதர்ஷினி, 15, பத்தாம் வகுப்பு படிக்கிறார். இருவரும் தோழியர்.கடந்த 24ல் கோகிலவாணி, வங்கி கணக்கு துவங்க இருப்பதால் பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறி வெளியே சென்றார். மாலையில் தோழி பிரியதர்ஷினியுடன் வீட்டுக்கு வந்தார். பின்னர் கோகிலவாணி, பிரியதர்ஷினியை வீட்டில் சென்று விட்டு வருவதாக கூறி கிளம்பினார். ஆனால் பிரியதர்ஷினி வீட்டுக்கு செல்லவில்லை. இரு குடும்பத்தினரும் காணாமல் போன சிறுமியரை தேடி வருகின்றனர். கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை