உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டூவீலரில் சென்றவர் பலி

டூவீலரில் சென்றவர் பலி

புன்செய்புளியம்பட்டி: நம்பியூரை அடுத்த சாவக்காட்டுபாளையத்தை சேர்ந்தவர் சாமிநாதன், 56; புன்செய் புளியம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு, எக்ஸ்.எல்., சூப்பர் மொபட்டில் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு, இவர் நேற்று முன்தினம் இரவு சென்றார். புளியம்பட்டி-நம்பியூர் சாலையில் பாறைபுதுார் முனியப்பன் கோவில் அருகே சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்தில் பலியானார். புளியம்பட்டி போலீசார், விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !