உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓடும்போது தீப்பிடித்து எரிந்த வாகனம்

ஓடும்போது தீப்பிடித்து எரிந்த வாகனம்

புன்செய்புளியம்பட்டி: கோவை அருகே சூலுாரில் இருந்து சத்தியமங்கலத்துக்கு, சோபா செட்களை ஏற்றிய மினி சரக்கு வாகனம் நேற்று புறப்பட்டது. கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில், புன்செய்புளியம்பட்-டியை அடுத்த நல்லுாரில் மதியம் சென்றபோது, வாகனத்தின் முன்பக்கம் திடீரென புகை கிளம்பியது. டிரைவர் விஷ்வா, 21, உள்பட இருவர், உடனடியாக நிறுத்தினர். சுதாரிப்பதற்குள் தீப்பி-டித்து எரியத் தொடங்கியது. சத்தி தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் வாகனம் மற்றும் சோபா செட்கள் தீயில் முழுவதும் எரிந்து விட்டது. சேத மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கலாம் என்று தெரிகிறது. சாலையில் சென்ற வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !