2,329 பூத்களிலும் வெப் காஸ்டிங்
கோபி:கோபி மற்றும் பவானிசாகர் சட்டசபை தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை, கோபி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது. இங்கு கலெக்டர் கந்தசாமி, ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்த முறை மாவட்டத்தில் உள்ள 2,329 ஓட்டுச்சாவடியிலும், 'வெப் காஸ்டிங்' என்ற நேரடியாக தேர்தல் அலுவ-லகத்துக்கு ஒளிபரப்பும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் வெளியே மற்றும் உள்ளேயும் நடக்கும் நிகழ்வு, இரு முனைகளில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்-டுள்ளது. முழுமையான ஒரு பாதுகாப்பான தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.