உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திருடிய மாட்டை சந்தையில் விற்ற களவாணி தேடிச்சென்று மடக்கிய சபாஷ் வியாபாரி

திருடிய மாட்டை சந்தையில் விற்ற களவாணி தேடிச்சென்று மடக்கிய சபாஷ் வியாபாரி

காங்கேயம் காங்கேயத்தை அடுத்த நத்தக்காடையூரை சேர்ந்த மாட்டு வியாபாரி கண்ணன், 60; இவர் வீட்டருகே கட்டியிருந்த சிந்துமாடு மற்றும் கன்றுகுட்டி, நேற்று முன்தினம் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர், திருப்பூரில் நேற்று நடந்த சந்தைக்கு சென்றார்.அவரது சிந்து மாடு ஒருவரிடம் இருந்தது. அவரிடம் விபரம் கேட்டபோது, பொள்ளாச்சியை சேர்ந்தவர் என்பதும், 21 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியதும் தெரிந்தது.விற்றவர் யார் என கேட்டபோது, ஆட்டோவில் மாட்டை கொண்டு வந்தது தெரிய வந்தது. மாட்டை கொண்டு வந்த நபரிடம் மொபைல்போனில் பேசியபோது பதில் அளிக்கவில்லை.இதனால் மாட்டை வாங்கியவரிடம் விபரம் சொல்லி, நத்தக்காடையூருக்கு சென்று மாட்டை விற்பனை செய்தவரிடம் விசாரித்தனர். மாடு மற்றும் கன்றை திருடியது, நத்தக்காடையூர் வெள்ளியம்பாளையம் யுவராஜ்குமார், 30, பாஸ், 31, என தெரியவந்தது.இருவரையும் சந்தைக்கு அழைத்து சென்று, மாட்டை வாங்கியவரிடம் பணத்தை தர செய்தார். இதையடுத்து அவர் கண்ணனிடம் மாட்டை ஒப்படைத்தார். கண்ணன் புகாரின்படி காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை