உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கணவர் சாவில் சந்தேகம் போலீசில் மனைவி புகார்

கணவர் சாவில் சந்தேகம் போலீசில் மனைவி புகார்

அந்தியூர், :பவானி அடுத்த எலவமலை மேட்டுத்தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி குருசாமி, 39; மனைவி விஜயசாந்தியுடன், 33, பவானி லட்சுமி நகரில் வசித்தார். அந்தியூர், புதுக்காடு மயில்பாலி தோட்டத்தை சேர்ந்த சாமியார் சித்தன். இருவரும் நெருங்கிய நண்பர்கள்.கடந்த, 17ம் தேதி, சாமியாரை பார்க்க சென்ற குருசாமி, அங்கு களைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சேலம் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.இந்நிலையில் அவரின் மனைவி விஜயசாந்தி, கணவரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக, அந்தியூர் போலீசில் நேற்று புகாரளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை