உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி

கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி

சத்தியமங்கலம்:கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் பைரேஸ், 26; தேங்காய் பறிக்கும் தொழிலாளி. தாளவாடி அருகே அருள்வாடியில் ஒரு தோப்பில் தேங்காய் பறிக்கும் பணியில் நேற்று காலை ஈடுபட்டிருந்தார். அப்போது தேனீக்கள் கடித்ததால் வலியால் துடித்தார். சிகிச்சை பெற மருத்துவமனை செல்வதற்காக, உடனடியாக மரத்தில் இருந்து இறங்கியவர், துணி மாற்றினார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றில் விழுந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் வரும் வழியிலே பைரேஸ் இறந்து விட்டது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை