கிரஷர் இயந்திரத்தில் தவறி விழுந்த தொழிலாளி சீரியஸ்
புன்செய்புளியம்பட்டி:உ.பி., மாநிலத்தை சேர்ந்தவர் போலே ஷங்கர், 20; பவானிசாகர் அருகே ஒரு கிரஷரில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது தவறி விழுந்து காயமடைந்தார். சக தொழிலாளர்கள் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பவானிசாகர் போலீசார் விசாரணையில், தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மேற்கொள்ளாததால் விபத்து நடந்தது தெரிய வந்தது.வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.