உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மிஷினில் தந்தை, மகனை அறுத்த ஒர்க்ஷாப் உரிமையாளர் கைது

மிஷினில் தந்தை, மகனை அறுத்த ஒர்க்ஷாப் உரிமையாளர் கைது

ஈரோடு: ஈரோட்டில், மரம் அறுக்கும் டிரில்லர் மிஷினில் தந்தை, மகனை அறுத்து காயப்படுத்திய வெல்டிங் ஒர்க்ஷாப் உரிமை-யாளர் கைது செய்யப்பட்டார். ஈரோடு, ஷேக் தாவூத் வீதி புதுமை காலனி அலாவுதீன் மகன் முகமது ஆசிக், 30. வீட்டின் அருகே கறிக்கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு அருகே அதே பகுதியை சேர்ந்த அனீபா, 45. வெல்டிங் ஒர்க்ஷாப் வைத்து, தள்ளுவண்டிகள் தயாரித்து கொடுக்-கிறார். மர பலகையை ரம்பம் கொண்டு அறுக்கும் போது, மரத்-துாள்கள் கறிகளில் ஒட்டி கொள்கிறது. இதனால் கறி மாசுபடுகி-றது. துாசி வராமல் வேலை செய்யுமாறு அனீபாவிடம் கடந்த, 20 மதியம் முகமது ஆசிக் தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த அனீபா, தகாத வார்த்தைகளால் முகமது ஆசிக்கை திட்டியுள்ளார். மேலும் அவரது தந்தை அலாவுதீன், முகமது ஆசிக்கை மரம் அறுக்கும் டிரில்லர் மிஷினில் அறுத்-துள்ளார். இதில் ஆசிக்கிற்கு தலை, வலது முன் கையிலும், அலா-வுதீனுக்கு முகம், இரு கைகளிலும் பலத்த ரத்த காயம் ஏற்பட்-டது. இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்-டனர். ஆசிக் கொடுத்த புகார்படி, இரு பிரிவுகளின் கீழ் சூரம்-பட்டி போலீசார் வழக்குப்பதிந்து அனீபாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை