மேலும் செய்திகள்
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு
12-Jul-2025
ஈரோடு :உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி, ஈரோட்டில் நேற்று நடந்தது. இதற்கான விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் கந்தசாமி, கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக உலக மக்கள் தொகை நாளை முன்னிட்டு நடந்த பேச்சு போட்டியில் வென்ற, 3 மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்று வழங்கப்பட்டது. நிகழ்வில் இணை இயக்குனர் (நலப்பணிகள்) சாந்தகுமாரி, மாவட்ட சுகாதார அலுவலர் அருணா, துணை இயக்குனர் (குடும்ப நலன்) கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
12-Jul-2025