உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இரட்டை கொலை வழக்கில் சிக்கிய வாலிபர் விபரீத முடிவு

இரட்டை கொலை வழக்கில் சிக்கிய வாலிபர் விபரீத முடிவு

ஈரோடு:கொடுமுடி ராசாம்பாளையம் சிட்டபுள்ளாபாளையத்தை சேர்ந்தவர் சாமிநாதன், 53; இவரின் மகன் சூர்யா, 28; இருவர் மீதும், 2020ல் நடந்த இரட்டை கொலையில், கொடுமுடி போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை ஈரோடு நீதிமன்றத்தில் நடக்கிறது. நீதிமன்றத்தில் நவ.,10ல் (நேற்று) ஆஜராக வேண்டும். இதன்ல் மகன் சூர்யாவிடம் தெரிவித்துவிட்டு, ஈரோடு நீதிமன்றத்துக்கு சாமிநாதன் நேற்று காலை சென்று விட்டார். நொய்யல் ஆற்றில் குளித்து விட்டு வருவதாக தெரிவித்த சூர்யா, நீதிமன்றத்துக்கு வரவில்லை. இதனால் சாமிநாதன் போன் செய்தும் அழைப்பை எடுக்கவில்லை.இதனிடையே நொய்யல் ஆற்றின் முட்புதரில் சூர்யா மயங்கி கிடப்பதாக, அப்பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்தவர், சாமிநாதன் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார். அவர்கள் சென்று பார்த்து சூர்யாவை மீட்டு, கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் விஷம் குடித்ததால் இறந்து விட்டது தெரிய வந்தது. இரட்டை கொலை வழக்கில் தந்தை பெயரும் இருப்பதால், மன உளைச்சலில் விஷமருந்தி, தற்கொலை செய்து கொண்டதாக கொடுமுடி போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ