உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெயின்டரை தள்ளிவிட்டு கொன்ற வாலிபர் கைது

பெயின்டரை தள்ளிவிட்டு கொன்ற வாலிபர் கைது

பவானி, அம்மாபேட்டை அருகே முகாசிப்புதுாரை சேர்ந்தவர் ஆண்டவர், 55; பெயின்டரான இவரிடம், அதே பகுதியை சேர்ந்த சதீஸ், ௩௭, வேலை செய்தார். இரு நாட்களுக்கு முன், கூலி பணம் கேட்டு வாக்குவாதம் செய்து, ஆண்டவரை தள்ளிவிட்டார். இதில் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். மகள் பூஜா மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு தந்தையை கொண்டு சென்றார். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இந்நிலையில் புகாரின்படி அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான சதீஸை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி