உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளச்சாராய வழக்கில் மேலும் 3 பேருக்கு குண்டாஸ்

கள்ளச்சாராய வழக்கில் மேலும் 3 பேருக்கு குண்டாஸ்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய வழக்கில் கைதான 24 நபர்களில், மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் இறந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி.,போலீசார், 24 பேரை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். அவர்களில், கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பரமசிவம்,40; மாதவச்சேரி ராமர்,36; கருணாபுரம் முருகேசன்,48; ஆகியோரை, சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., வினோத்சாந்தாராம் பரிந்துரையை ஏற்று, குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார்.இந்த உத்தரவு நகலை, கடலுார் மத்திய சிறையில் உள்ள மூவரிடம் நேற்று சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழங்கினர்.இதன் மூலம், கள்ளச்சாராய வழக்கில் இதுவரை 14 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ