அம்மன் கோவில் தேர் திருவிழா
கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையத் தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மயான கொள்ளை திருவிழா கடந்த பிப்., 22 ஆம் தேதி காப்பு கட்டுதலு டன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்து இரவு நேரங்களில் வீதி உலா நடந்தது. கடந்த, 27ம் தேதி கோமுகி ஆற்றில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்தனர்.