உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி:' கள்ளக்குறிச்சியில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கொளஞ்சியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரேமா, அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் மகாலிங்கம், சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் செந்தில், பொருளாளர் வீராசாமி முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடன் நிரப்ப வேண்டும். 1993 மேற்பார்வையாளர் பணிக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

விழுப்புரம்

விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் மலர்விழி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுதா, துணைச் செயலாளர் சினேகலதா முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் முத்துக்குமரன், பொருளாளர் பாலகிருஷ்ணன், கட்டுமான சங்க பொருளாளர் முருகன், தையல் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் காஞ்சனா ஆகியோர் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ